காஞ்சிபுரம், ஜன. 04 –
காஞ்சிபுரம் நடுத்தெருவில் இயங்கி வரும் பிரபல A.S. பாபு ஸா பட்டு சேலை கடையில், இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும் காலையில் கடை திறந்தவுடன் வருமான வரிதுறையைச் சேர்ந்த பத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள் வந்து இச்சோதனையில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து அக்கடைக்கு வந்திருந்த வாடிக்கையாளர்கள் அனைவரும் வெளியே அனுப்பப்பட்டனர். அதனைத்தொடர்ந்து கடையும் மூடப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.