மயிலாடுதுறை, மார்ச். 10 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறை மாவட்டம், கிழாய் கிராமத்தில் அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் குழந்தை பாக்கியம் வேண்டி பக்தர்கள் வழிபடும் அவ்வாலயத்தின் மயானசூரை திருவிழா நடைப்பெற்றது. அவ்விழாவில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தா்க்களுக்கு வேண்டிய வரத்தினை தரும் அம்மன் அனைவருக்கும் அருள் பாலித்தார்.
மணல்மேடு தாலுக்கா, கிழாய் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயம் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி தினங்களில் நடைபெறும் மயான கொள்ளை திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
மேலும் அவ் விழாவினை முன்னிட்டு, சுவாமிக்கு விசேஷ அபிஷேக ஆராதனையும், சந்தனகாப்பு அலங்காரமும் நடைபெற்றது. அதற்காக ஆலயத்தில் ஏராளமான பெண்கள் மா விளக்கிட்டு வழிபாடு நடத்தினர்.
பின்னர் பேச்சாயி அம்மன் புறப்பாடு செய்யப்பட்டு மேளதாள வாத்தியங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா நடைபெற்றது. வீதிகள் தோறும் கிராம மக்கள் மா விளக்கிட்டு பேச்சாயியம்மனை வழிபட்டனர்
அதில் ஆயிரக்கணக்கான கிராம மக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபாடு செய்தனர். மேலும் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் அருட்பிரச்சாதம் உண்டு அம்மனை வழிப்பட்டனர்.





















