காஞ்சிபுரம், ஆக. 29 –

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசித்து வரும்  நரிக்குறவரின மக்கள் 38 பேர் வீட்டு மனை பட்டா வாங்க முடியாமல் முப்பது ஆண்டு காலமாக தவித்து வந்த நிலையில் அதற்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கத்தில் நடைப்பெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் பட்டா அவர்களுக்கு வீட்டுமனை பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்த்தி வழங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் நல்லுரவு கூட்டத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும் இந்த கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள்  பட்டா  மாற்றம், நியாயவிலை அட்டை, ஆதார் அடையாள அட்டை, என மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர கோரி மனுவாக வழங்குவார்கள். விவசாயிகளும் தங்கள் குறைகளை மனுவாக வழங்குவது வழக்கம். இந்நிலையில் இன்று நடைப்பெற்ற அக்கூட்டத்தில் முப்பது ஆண்டுகளாக பட்டா கேட்டு பல அரசு அலுவலகங்களில் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்ற நிலையில் தவித்து வந்த  38 காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெருமந்தூர் அருகே நெமிலியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் நரி குறவ  குடும்பங்களுக்கு தமிழக அரசின் சார்பில் 38 குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டாவை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வழங்கினார். 30 ஆண்டு கால போராட்டத்திற்கு இன்று விடியல் பிறந்துள்ளதாக மாவட்ட நிர்வாகத்திற்க்கும் தமிழக அரசிற்கும் நரி குறவ குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here