காஞ்சிபுரம், பிப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ..
காஞ்சிபுரம் மாவட்டம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் நலிந்த ஏழை எளிய பொதுமக்களுக்கு ரூ10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாநில செயலாளர் டாக்டர் பரமசிவம் வழங்கினார்.
தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொது செயலாளருமான மறைந்த ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழாவினை தமிழகம் முழுவதும் அதிமுகவினரால் வெகுச் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
அதன் பகுதியாக காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் மணிவண்ணன் தலைமையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் அருகே பொது மக்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
அச் சிறப்புமிகு விழாவில் விருந்தினராக அதிமுக மாநில இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் பரமசிவம் மற்றும் மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் கழக அமைப்பு செயலாளார் வாலாஜாபாத் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு ரூபாய் பத்து லட்சம் மதிப்பிலான மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்கூட்டர், பெண்களுக்கு தையல் இயந்திரம், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சைக்கிள், சலவை தொழிலாளிகளுக்கு சலவை இயந்திரம், சாலையோர உணவுக நபர்களுக்கு உபகரணங்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
விழாவில் பேசிய மாநில இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம் , அதிமுக சார்பில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட தாய்சேய் நல பெட்டகம் , அம்மா உணவகம், மினி கிளினிக் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளையும் , தற்போதைய திமுக அரசின் அவலங்களையும் எடுத்து கூறி வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகள் சேகரித்து அதிமுகவில் வெற்றி பயணம் ஆக்க வேண்டும் எனவும், முன்னாள் முதல்வரின் பிறந்தநாள் என்றாலே பொதுமக்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் விழா என பொதுமக்கள் தற்போது எண்ணி உதவிகளைக் கேட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழனி, மாவட்ட அவைத்தலைவர் குன்னவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ் சோமசுந்தரம் , மாணவரணி மாவட்ட செயலாளர் தில க் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்