மார்ச் 28, 29 தேதிகளில் அனைத்து மத்திய தொழிற் சங்கங்கள் சார்பாக நடைப் பெறயிருக்கும் அகில இந்திய பொது வேலை நிறுத்தம் குறித்த விளக்க தெருமுனை கூட்டம் மீஞ்சூரில் நடைப்பெற்றது
மீஞ்சூர், மார்ச். 22 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பஜார் வீதியில் அனைத்து மத்திய தொழிற் சங்கங்களின் பொது வேலை நிறுத்த விளக்க தெருமுனை கூட்டம் இதில் மார்ச் 28,29 ஆகிய இரண்டு நாள் அகில இந்திய பொது வேலை நிறுத்தம் குறித்து திருவள்ளூர் மாவட்ட அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில் நடைபெற்றது.
இதில் சி.ஐ.டி.யூ மாவட்ட இணைச்செயலாளர் நரேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் எல்.பி.எஃப் மாநில தலைவர் சசிக்குமார், ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட துணைத்தலைவர் பாலன், கட்டுமான சங்க மாவட்ட தலைவர் ஆனந்தன், காமராஜர் துறைமுகம் எம்ரோஸ், ஐ.என்.டி.யூ.சி மாநில துணை பொதுச்செயலாளர் தாமோதரன், மாநில துணைத் தலைவர் பாலகிருஷ்ணன், பொருளாளர் சதீஷ், சி.ஐ.டி.யூ மாவட்ட துணை தலைவர் வினாயகமூர்த்தி, மாவட்ட தலைவர் கதிர்வேலு, ரமேஷ் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் இதில் முன்னிலை வகித்து கூட்டத்தில் சிறப்புரையாற்றினர்
அவர்கள் பேசுகையில் மத்திய அரசு பல்வேறு துறைகளை தனியாருக்கு ஒப்பந்தம் செய்து வருகிறது. இப்படி எல்லா துறைகளையும் எல்.ஐ.சி.. உள்பட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கி வருகிறது. அதே போல் மின்சார உற்பத்தி நிலையங்களையும் தனியார் மயமாக்க முனைப்பு காட்டுகிறது. அதனை தடுக்கும் வகையில் வருகின்ற 28 .29 .ஆகிய நாட்களில் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகவும விரிவாக எடுத்துரைத்து உரை நிகழ்த்தினார்கள்





















