காஞ்சிபுரம், ஜன. 17 –

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலன் கேட் பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் வழங்கப்பட்டவில்லை என புகார் எழுந்துள்ளது

இதுக்குறித்து முறையாக குடிநீர் வழங்க கோரி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுகாத காரணத்தினால் காலி குடங்களுடன் பெண்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தை தொடர்ந்து, போரட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here