காஞ்சிபுரம், செப். 7 –

அத்தி வரதர் சுவாமி படத்திற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டதை கண்டித்து   பெரியார், மணியம்மை வீரமணி, படங்களுக்கு பெண் ஒருவர் தாலி அணிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் காஞ்சிபுரத்தில் பரபரப்பானது.

காஞ்சிபுரம் சங்குபாணி விநாயகர் கோயில் அருகே கடந்த 2ம்தேதி விநாயகர் சதுர்த்தி விழா விற்கு அனுமதி தர வேண்டும் எனக் கோரி இந்து முன்னணி பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவில் அருகே பூஜை பொருள் விற்பனை செய்யும் கடை வைத்திருந்தவர் திக பிரமுகர் என கூறி, அத்தி வரதர் சுவாமி படத்திற்கு செருப்பு அணிவித்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த பாஜக, இந்து முன்னணியினர் அவரது கடையை அடித்து உடைத்தனர். இச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு இரு தரப்பினரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் சங்குபாணி விநாயகர் கோவில் அருகே இன்று சென்னையைச் சேர்ந்த சமுக ஆர்வலர் நர்மதா நந்தகுமார் என்ற பெண் அத்திவரதர் படத்திற்கு செருப்பு அணிவதை கண்டித்து தந்தை பெரியார், மணியம்மை, திராவிட கழகத் தலைவர் வீரமணி ஆகியோரின் படத்திற்கு தாலி அணிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார்

பெண்ணொருவர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிவகாஞ்சி போலீசார் நர்மதா நந்தகுமாரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here