காஞ்சிபுரம் மாவட்டத்தால் அமைக்கப் பட்டுள்ள சிறப்பு  கொரோனா  தடுப்பூசி 200 மையங்களில் பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம், செப் . 19 –

தமிழகம் முழுவதும் கொரோனா கட்டுப்படுத்துவதற்காக இன்று தமிழக முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு செயல் பட்டு வருகிறது.  இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட நிருவாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மாவட்டம் முழுவதும் இன்று 200க்கும் மேற்பட்ட பகுதிகளில் சிறப்பு முகாம் நடைபெற்று வருகின்றது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு தடுப்பூசி முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு காத்திருந்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

மாவட்ட முழுவதும் இதுவரை 6 லட்சத்து 16 ஆயிரம் பேர் தடுப்பு செலுத்தி உள்ளனர்.  இன்று மாவட்டம் முழுவதும்  200 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

பொதுமக்கள் அதிக அளவில் ஒன்று கூடும் இடமான பேருந்து நிலையம், ரயில்வே நிலையம், கோவில்கள், மாவட்ட ஆட்சியர் வளாகம், அரசு அலுவலகங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் காத்திருந்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here