காந்தியடிகளின் 150வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு போர் ஊர்திகள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் சார்பில் மத்திய அரசின் திட்டப்பணிகள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
ஆவடி; அக்.2-
சென்னை அடுத்த ஆவடியில் அமைந்துள்ள மத்திய அரசின் போர் ஊர்திகள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் சார்பில் மத்திய அரசின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டப்பணிகள் குறித்தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியில் பிளாஸ்டிக் ஒழிப்பு, உடல்நலம் காணும் திட்டம் (fit India), ஜெய் சக்தி அபியான், மரம் நடுதல், தண்ணீர் சேமிப்பு, என தேசிய திட்டங்களை வலியுறுத்தி பேரணி நடைபெற்றது. பேரணியில் மத்திய அரசு ஊழியர்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மேலும் ஆவடி பாதுகாப்பு துறை குடியிருப்புகளில் சுத்தமாக வைத்திருக்கும் குடியிருப்புகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.















