pic file copy

ஆரம்பாக்கம், மார்ச். 04 –

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராஜூ தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுப்பட்டிருந்த வேளையில், பெரியநத்தம் கோட்டைக்கரைமேடு பொன்னியம்மன் கோயில் பின்புறம் உள்ள தைலந்தோப்பில் மூன்று பிளாஸ்டிக் கோணிப் பைகளில், தலா ஒவ்வொரு பையிலும் 7 கிலோ கஞ்சா வீதம் மொத்தம் மூன்று பைகளில் 21 கிலோ கஞ்சாவுடன் அதனை விற்பனை செய்வதற்காக கும்மிடிப்பூண்டி பகுதியில் காட்டுஅப்பாவரம்கிரமத்தில் வசிக்கும் பொன்னுச்சாமி என்பவரின் மகன் சுரேஷ் வயது 27, காட்டுசின்னநத்தம் கிராமத்தில் வசிக்கும் சீனிவாசன் என்பவரின் மகன் புருஷோத்தம்மன் என்ற நிஷாந்த் வயது 20, தலையாரிப்பாளையத்தைச் சேர்ந்த வாசு என்பவரின் மகன் யுவராஜ் வயது 27 மற்றும் கும்மிடிப்பூண்டி பகுதியில் வசிக்கும் ஆறுமுகம் என்பவரின் மகன் தேவராஜ், பழனி என்பவரின் மகன் யுவராஜ் ஆகிய ஐந்து பேர் கொண்ட குழு அப்பகுதியில் பதுங்கியிருந்தார்கள்.

அவர்கள் கைகளில் வைத்திருந்த பைகளை சோதிட்டப் போது கஞ்சா இருப்பது உறுதியானது. அதனைத் தொடர்ந்து சுரேஷ், புருஷோத்தம்மன் என்ற நிஷாந்த், மற்றும் வாசு என்பவரின் யுவராஜ் ஆகிய மூவரையும் போரீசார் கைது செய்து அவர்கள் கஞ்சாவை கடத்தி வர பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து அவர்கள் மூவரும் காவல்நிலையம் அழைத்து வரப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் பேரில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, ஆரம்பாக்கம் காவல்நிலைய போலீசார் தொடர் சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here