காஞ்சிபுரம், ஜூலை. 20 –

கோவில் நகரமான காஞ்சிபுரத்தில், பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோயிலில் உள்ள இரு உண்டியல்கள்,  79 நாட்களுக்கு பிறகு, இன்று மீண்டும் திறந்து சி.சி.டி.வி கேமரா முன்பு எண்ணப்பட்டது.

இப்பணி இன்று காலை 10 மணிக்கு திருக்கோயில் பணியாளர்கள், சென்னையை சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனத்தின் பணியாளர்கள் என மொத்தம் 80 பேர் பக்தர்கள் வழங்கிய இத்திருக்கோயில் உண்டியல் காணிக்கையை இக்கோயிலின் செயல் அலுவலர் ந.தியாகராஜன் முன்னிலையில் எண்ணும் பணியில் ஈடுபட்டு மாலை 6 மணிக்கு நிறைவுபெற்றது.

இதில் பக்தர்கள் செலுத்தியது தங்கம் 589 கிராம், வெள்ளி 847 கிராம் மற்றும் ரொக்கமாக ரூ.74.40.102 ஆகியன இருந்தது. இத்தொகை முழுவதும்,  காஞ்சிபுரத்தில் இந்தியன் வங்கி சங்கரமடம் கிளையில் வைப்பு  வைக்கப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here