காஞ்சிபுரம் நத்தபேட்டை அருகே உள்ள முட்புதரில் இரண்டு சாரை பாம்புகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து நடனம் ஆடிய காட்சி சமுக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

காஞ்சிபுரம், பிப். 21 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்…

காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் மாநகராட்சிக் குட்பட்ட 27 வது வார்டு நத்தப்பேட்டை அருகே மேட்டு தெரு பகுதியில் உள்ள குளம் அருகே முட்புதர்கள் இருப்பதால் விச ஜந்துக்கள் அவ்வப்போது வருவதாக அப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரியிடம் மனுக்கள் அளித்தும் அதுக்குறித்து எவ்வித நடவடிக்கைகளை எடுக்கவில்லை என அப்பகுதி வாழ் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இன்று பிற்பகல் குளத்தின் அருகே முட்புதரில் சுமார் 8 அடி நீளம் உள்ள இரண்டு சாரை பாம்புகள் ஒன்றுடன் ஒன்று இணைத்து நடனமாடி கொண்டிருந்ததை அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தது மட்டுமல்லாது. அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து உள்ளனர்.

தற்போது அவ் வீடியோ சமுக வலைத் தளங்களில் வைராலாகி வருகிறது. அது ஒருபுறம் இருப்பினும், மாநகராட்சி நிர்வாகம்  குளத்தின் அருகே உள்ள முட்புதர் பகுதியை சுத்தம் செய்து விஷ ஜந்துக்கள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here