போளூர் செப்.26-
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஜமுனாமரத்தூரில் மாவட்ட வன அலுவலர் அருண்லால் உத்தரவின்படி ஜமுனாமரத்தூர் வனச்சரக அலுவலர் குணசேகரன் அறிவுறுத்தலின் படி ஜமுனாமரத்தூர் வனச்சரகம் கோமுட்டேரி பிரிவு, கோமுட்டேரி கிராமத்தில் வனவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கோவிட்-19 தடுப்பூசி முகாம் குறித்து விழிப்புணர்வு நேற்று கூட்டம் நடைபெற்றது.
இதனை அடுத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டது. மேலும் இக்கூட்டத்தில் வனக்காப்பாளர்கள் திருமலைவாசன், பிரசன்ன மூர்த்தி, நித்யானந்தம், சிவராஜ், அழகுமணி, வனக்குழு தலைவர் சுரேஷ்குமார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.