வெற்றி படங்களில் நடித்து வருபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மற்றும் ‘பியார் பிரேமம் காதல்’ படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் புல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரியை சேர்ந்த ராணுவ வீரர் சுப்பிரமணியனின் இல்லத்திற்கு நேரில் சென்றிருக்கிறார்.
அங்கு சுப்பிரமணியனின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின், அவரது மனைவி பிரியா மற்றும் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
அப்போது பேசிய அவர், “தீவிரவாதத்திற்கு எதிராக ஒட்டுமொத்த மக்களும் ஒன்றிணைய வேண்டும்” என்று கூறினார்.