பாபநாசம், மே. 11 –

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தியின் முதல் நாளான இன்று மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் 150 க்கு மேற்பட்ட மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக் கொண்டார் மேலும், அம்மனுக்கள் குறித்த நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள துறைச் சார்ந்த அலுவலர்களுக்கு அப்போது அறிவுறுத்தினார். மேலும் இம்மஹாவில் மூன்று பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.

தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கும்போது,

ஆன்லைன் பட்டா பதிவுகளை அதிகாரிகள் கொண்டு வாரம் தோறும் கண்காணிக்கப்படும் எனவும், ஆன்லைன் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு தனி அதிகாரி நியமித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது  எனவும் தெரிவித்தார்.

மேலும்  தமிழக முதல்வரிடம் இரண்டாம் கட்ட நிதி ஒதுகீட்டிலிருந்து மேலவழுத்தூர் திதிராவிடர் நடுநிலைப் பள்ளியின் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அப்போது மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here