காஞ்சிபுரம், ஜூலை. 07 –
தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுவர், தஞ்சாவூர், தென்காசி உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவித்திருந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பத்து நிமிடங்கள் மட்டுமே மழை பெய்தது.
குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலம், கீரைமண்டபம், காவாலன்கேட், மேட்டு தெரு, ரங்கசாமிகுளம், காந்திசாலை, காமராஜர் சாலை, மூங்கில் மண்டபம், பூக்கடைசத்திரம் என மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. மாலை நேரத்தில் பெய்த மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகின்றது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.





















