மீஞ்சூர், ஜூலை. 07 –
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த வல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் என்பவரின் மகன் வாசுதேவன். இவர் சென்னை மாநகராட்சியில் மின் துறையில் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். .இவருக்கு நிர்மலா 49. என்ற மனைவியும் நவீன் குமார் 29 என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் இன்று இரு சக்கர வாகனத்தில் மீஞ்சூரை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது சரியாக பட்ட மந்திரி வளைவினை கடக்கும் போது, இவர்களுக்கு பின்னால் வந்த டிப்பர் லாரி வேகமாக மோதியதாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் தூக்கி வீசப்பட்டு அதில் சம்பவ இடத்திலேயே தாய் நிர்மலா இறந்து விட, நவீனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிவுள்ளார்.
இத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீஞ்சூர் காவல் நிலைய போலீசார் நிர்மலாவின் உடலையும் உயிருக்கு போராடிய நவீனையும் மீட்டு பொன்னேரி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அவர்கள் இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் இவரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மீஞ்சூர் போலீசார் இவ்விபத்துக் குறித்து வழக்கு பதிவு செய்து திருவள்ளூர் கரிகலாவாக்கம் பகுதியைச் சேர்ந்த வாசுதேவன் என்பவரின் மகனான லாரி ஓட்டுநர் கோதண்டன் 40 என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இச்சம்பவத்தில் உயிர் இழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு பொது மருத்துவமனையில் வைத்துள்ளனர். மேலும் இவ் விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



















