ரம்ஜான் பண்டிகையை கொண்டாட முடியாத வறுமை நிலையில் இருந்த குடும்பத் தலைவனை இழந்த இஸ்லாமிய குடும்பம் – புத்தாடை மற்றும் அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்களை வழங்கி சிறப்பாக கொண்டாட செய்த நாஞ்சிக்கோட்டை வாழ் மாற்று மத மக்கள்.
தஞ்சாவூர், ஏப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சிக் கோட்டை சாலையில் உள்ள குடியிருப்புகள் காலணியில் ஒரு இஸ்லாமிய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அக்குடும்பத்தில் சில தினங்களுக்கு முன்னர் அக்குடும்பத்தின் தலைவர் இறந்து விட்டார்.
இந்நிலையில் மிகவும் வறுமையான நிலையில் வாழ்ந்து வந்த அக்குடும்பத்தினர் ரமலான் பெரு விழாவினை கொண்டாட வழியில்லாமல் மிகுந்த சோர்வு நிலையில் இருந்துள்ளனர்.
அதனைப் புரிந்துக் கொண்ட அக்காலணியில் வசிக்கும் இந்துக்கள் ஒன்று இணைந்து இல்லாமிய குடும்பததில் உள்ள அனைவருக்கும் புத்தாடைகள், ஒரு மாதத்திற்கு தேவையான ஒரு மூட்டை அரிசி, மளிகை பொருட்களை எல்லாம் வாங்கி கொண்டு வந்து அவர்களுக்கு தாய் வீட்டு சீர் வரிசையாக வழஙகினார்கள்.
பின்னர் பெண்கள் கட்டி அனைத்து இஸ்லாம் குடும்ப பெண்களுக்கு ஆறுதல் கூறினார்கள். வீட்டுக்காரர் இல்லைனு வருத்தப்பட கூடாது எங்களால் முடிந்த துணி எடுத்து கொடுத்து இருக்கிறோம் பண்டிகை தின வாழ்த்துகள் என கூறியவர்கள் நாம் மதம் பார்ப்பதில்லை அனைவரும் மனிதர்கள்தான் நீங்களும் விருந்தில் வந்து கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்து. காலணியில் உள்ள அனைத்து குடும்பத்தினரும் ரம்ஜான் பிரியாணி விருந்து அளித்து உளம் மகிழ்ந்தனர்.


















