மீஞ்சூர், மே. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக பாலகணபதி…
கடவுள் நம்பிக்கையில்லாது அரசு கோவிலை நிர்வகிக்க கூடாது என்பதே மக்களின் எண்ணமாக உள்ளது என பாஜக மத்தியரசின் இணை அமைச்சர் எல்.முருகன் கருத்து தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்த மேலூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு திருவுடையம்மன் திருமணங்கீஸ்வரர் ஆலயத்தில் மத்திய இணை அமைச்சர் முருகன் சாமி தரிசனம் மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்
காங்கிரஸ் ஆண்டபோது எந்த வளர்ச்சி பணிகளையும் செய்யவில்லை, எனவும் மேலும் ஏழ்மை ஒழிக்கப்படும் என தெரிவித்தனர். ஆனால் அப்படியெதுவும் ஒழிக்கபடவில்லை என அப்போது அவர் தெரிவித்தார்.
பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு ஏழை மக்களின் நலன் மற்றும் வளர்ச்சிக்காக பாடுபட்டு வருகிறார் எனவும் மேலும் அவரது ஆட்சி காலத்தில் 25 கோடி பேர் வறுமை நிலையில் இருந்து மேன்மை நிலைக்கு வந்துள்ளதாகவும், மேலும் 11 லட்சம் கோடி ரூபாய் தமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசு நிதி அளித்துள்ளதாகவும், தமிழ் மொழி பண்பாடு கலாச்சாரத்தை உலக அரங்கில் எடுத்துச் சென்ற பெருமை பிரதமர் மோடிக்கு தான் அது சேரும் என்றார்.
மேலும் இன்னும் 25 ஆண்டுகளில் அதாவது 2047 ஆம் ஆண்டுக்குள் நமது நாடு முதன்மையான நாடாக அதாவது வல்லரச நாடாக இருக்கும் என்பதை நாம் பார்ப்போம் என பிரதமர் கூறி இருப்பதாகவும் அப்போது அமைச்சர் தெரிவித்தார்.
ரூ.1800 கோடியை தமிழ்நாட்டு மீன்வளத் துறைக்காக மட்டும் நிதி ஒதுக்கி உள்ளதாகவும் ஆனால் தற்போது வரை பழவேற்காடு முகத்துவாரம் சீரமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்க தங்களிடம் அறிவுறுத்தினால் மத்திய அரசு அதனை வழங்கும் எனவும், மேலூர் கோவில் ராஜகோபுரம் மற்றும் சீரமைப்பு பணிகள் குறித்து ஆறு மாதங்களாக அங்கு நடவடிக்கை எடுக்கவில்லையெனவும், மேலும் சாலைகள் முறையாக சீரமைக்க படுவதில்லை என்றும் ஆன்மீகத்தின் நம்பிக்கை இல்லாத திமுக அரசாங்கம் கோவிலை நிர்வகிக்க கூடாது என்பது மக்களின் எண்ணமாக உள்ளது எனவும் அப்போது அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் கூறுகையில் கஞ்சா வீடுகளுக்கே கஞ்சா வந்துவிடுமா என்ற பயம் மக்களுக்கு தற்போது வந்துள்ளது என்றும், எங்கு பார்த்தாலும் வெட்டு கொலை கொள்ளை என சட்ட ஒழுங்கு தமிழகத்தில் சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்.