காஞ்சிபுரம், ஜூலை. 02 –
காஞ்சிபுரம் மாநகராட்சியில் 36 வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் தேர்தல் அலுவலகத் திறப்பு விழா நடைப்பெற்றது.
கடந்த பிப்ரவரி மாதம் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் 50 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காஞ்சிபுரம் மாநகராட்சி 36வது வார்டுக்கான தேர்தல் வருகின்ற 9ஆம் தேதி நடைபெற இருக்கிறது
இதனைத் தொடர்ந்து உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் தலைமையிலும் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் முன்னிலையில் 36-வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சுப்புராயனை ஆதரித்து வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்து சிறப்புரையாற்றி வாக்கு சேகரித்தனர்.