மீஞ்சூர், ஜூலை. 01 –

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சி வட்டாரத்தில் அடங்கிய கடைக்காரர்களிடம் பிளாஸ்டிக் மற்றும் முககவசம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் ஆய்வு நடைபெற்றது.

இந்த ஆய்விற்கு மாவட்ட உதவி இயக்குநர் கண்ணன் தலைமை வகித்தார். மீஞ்சூர் பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றிஅரசு முன்னிலையில் வட்டாரத்தில் அடங்கிய அரியன்வாயில்.டி.எச் ரோடு. பஜார்வீதி உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள கடைக்காரர்களிடம் நேரடியாக சென்று பொருட்கள் வாங்க வருபவர்களிடம் முகக்கவசம் மற்றும் பிளாஸ்டிக் கவர்கள் பயன்பாடு குறித்து ஆய்வு நடத்தினர்.

இதில் பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தும் கடைக்காரர்கள் மற்றும் முகக்கவசம் மற்றும் இடைவெளி குறித்து வாடிக்கையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தாத கடைக்காரர்கள் ஆகியோர்களிடம் அபராதம் விதித்து அபரதத் தொகையாக 12, 100 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது பேரூராட்சியின் ஊழியர்கள் உடன் இருந்தனர்.

மேலும் ஆட்டோ வாகனத்தில் ஒளி பெருக்கி அமைத்து விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவக்கி வைத்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here