இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பில் புதிதாக அறிமுக படுத்தப்பட்டுள்ள சமூக காவல் செயல் முறை சிந்திப்போம் சிறப்போம் என்பது மூலம் மாவட்டத்தில் குற்றச் செயல்களை தடுப்பதற்கான மாற்றுச் சிந்தனையில் பொதுமக்களையும் காவல் துறையினரையும் சமூக அக்கறையில் ஈடுப்படுத்த மாவட்ட கண்காணிப்பாளர் மரு.தீபா சத்யன் ஐ.பி.எஸ்., புதிய முயற்சியை மேற் கொண்டுள்ளார். அது குறித்து பின்வருமாறு அவர் கூறுகிறார்.
இராணிப்பேட்டை, அக். 27 –
இராணிப்பேட்டை மாவட்டத்தில் காவல்துறையினர் மற்றும் பொது மக்கள் அன்றாடம் சந்திக்கும் பொது பிரச்சனைகள் குறித்து சிந்திக்கவும், அதற்கு தீர்வு காண முயற்சிக்கும், அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், சமூக காவல் நடைமுறையை மேம்படுத்தவும் சிந்திப்போம் சிறப்போம் என்ற புதிய செயல்முறையினை இராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை மூலம் துவங்கப் பட்டுள்ளது.
இந்த சமூக காவல் செயல்முறை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.தீபா சத்யன் கூறியதாவது.
சமூகத்தில் அன்றாடம் மக்கள் சந்திக்கும் பொது பிரச்சனைகள் ( சட்டம் ஒழுங்கு, குற்ற நிகழ்வுகள், சூதாட்டம், போதை பொருட்கள் விற்பனை, விபத்து, குழந்தை தொழிலாளர் முறை, குழந்தை திருமணம், போக்குவரத்து நெரிசல், திருட்டு, வழிப்பறி, கள்ளச்சாரயம், சைபர் கிரைம் குற்றங்கள், பெண்கள் மற்றும் குழந்மைகளுக்கு எதிரான குற்றங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, மூத்த குடிமக்கள் நலன் மற்றும் சமூகத்தை பாதிக்கும் விடயங்கள் ) காவல்துறையினர் மற்றும் பொது மக்கள் சிந்திக்கவும் அதற்கு தீர்வுக் காண அவர்களை ஊக்குவிக்கவும் சிந்திப்போம் சிறப்போம் என்ற புதிய செயல் முறை நடை முறைப்படுத்தப் பட்டுள்ளது.
இதன் மூலம் காவல் ஆளிநர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மேற்படி பிரச்சனைகளுக்கு தீர்வுக்காண புதிய சிந்தனைகள், யோசனைகள் வழங்கவும் அவர்கள் சமூகம் சார்ந்து சிந்திக்கவும், வாய்ப்பு ஏற்படுத்தி தருவதின் மூலம் ஒரு ஆரோக்கியமான போட்டியினை உருவாக்குவதோடு, சமூக சிந்தனையாளர்களை அங்கீகரிக்கவும் இந்த நடைமுறை அமல் படுத்தப்பட்டுள்ளது.
காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் மேற் குறிப்பிட்ட தினம் சந்திக்கும் பொது பிரச்சனைகள் குறித்து அவற்றில் எது குறித்து திருத்த நினைக்கும் பிரச்சனை அதற்குண்டான தீர்வு காண அவர்கள் முன் வைக்கும் திட்டம் குறித்த விரிவான விளக்கத்தினை எழுத்து மூலமாகவோ, தட்டச்சு மூலமாகவோ, மாவட்ட காவல் அலுவலகத்தில் இத்திட்டத்திற்கான பொறுப்பு அலுவலர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முகாம் உதவியாளர் ஜீ.வி.சிலம்பரசன் அவர்களிடம் நேரடியாக வழங்கலாம்.
மேலும் sprptcamp@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளலாம். மேலும் சிந்திப்போம் சிறப்போம் செயல்முறை குறித்த கூடுதல் தகவல்கள் மற்றும் சந்தேகங்கங்களுக்கு 78454 57095 என்ற கைப்பேசி எண்ணில் அழைத்தும் உதவிப் பெறலாம்.
மேலும் இந்த நடைமுறைக்கு அளிக்கப்படும் மாற்று சிந்தனைகளின் நடைமுறை சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து, சிறந்த செயல்முறைகளை அதை முன் மொழிந்தவர் மூலமாகவே நடைமுறைப்படுத்தப் படும். மேலும் அதன் விவரங்கள் பத்திரிகை செய்தியாக வெளியிடப்பட்டு, அவர்களின் திறைமையும், சிந்தனையும் அங்கீகரிக்கப் படுவதோடு, மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டத்தின் போது பரிசுகளும் வழங்கப்படும் என தெரிவித்தார்.