பொன்னேரி, ஜூலை. 21 –

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் அடங்கிய பேரிடர் மீட்பாளர்களுக்கு பேரிடர் மீட்பு பயிற்சி வகுப்பு பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

இப்பயிற்சி வகுப்பு கடந்த 1 ஆம் தேதி துவங்கி 30ஆம் தேதி வரை தினமும் வகுப்புகள் ஒருமாத காலமாக நடத்தப்பட்டு வருகின்றது. இதில் தற்போது பொன்னேரி பிர்க்காவில் அடங்கிய ஒட்டுமொத்த பயிற்சியாளர்களுக்கும் பேரிடர் மீட்பு குழுவின் சார்பில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றது.

பொன்னேரி பிர்க்கா வாரியாக வகுப்புகள்  நடத்தப்பட்டு. தற்போது முடிவுற்ற நிலையில், அதனைத் தொடர்ந்து மாவட்ட அளவிலும் நடத்தப்பட உள்ளது. இந்த பயிற்சி வகுப்பிற்கு ஓய்வு பெற்ற தாசில்தார் இளங்கோவன் தலைமை வகித்தார். திருப்பாலைவனம் வருவாய் அலுவலர் அன்புச்செல்வன். தாங்கள் பெருங்குளம் கிராம நிர்வாக அலுவலர் புவன்ராஜ். உள்ளிட்டோர்கள் முன்னிலை வகித்தனர். .இதில் திரளான பேரிடர் குழு மீட்பாளர்கள் திரளானோர் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சிப் பெற்றனர்.

பேரிடர் காலத்தில் பொதுமக்களை எவ்வாறு எல்லாம் காப்பாற்றுவது என பயிற்சி அளிக்கப்பட்டது. தீ பற்றி எரிந்தால் என்ன செய்வது. பாம்பு கடித்தால் எப்படி காப்பாற்றுவது. கை கால் முறிந்தவர்களை சிகிச்சைக்கு எவ்வாறு அழைத்துச் செல்வது உள்ளிட்ட முக்கிய பயிற்சிகளை இப்பயிற்சி வகுப்புகளில் நடத்தப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here