ரஷ்ய கடற்படையின் 325வது கடற்படை நாள் கொண்டாட்டங்களில பங்கேற்பதற்காக இந்திய கடற்படை கப்பலான ஐஎன்எஸ் தபார் ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்கை 2021 ஜூலை 22 அன்று சென்றடைந்தது.

ரஷ்ய கூட்டமைப்பிற்கான இந்திய தூதர் டி பி வெங்கடேஷ் வர்மா

கப்பலை பார்வையிட்டார். கப்பலின் தலைமை அதிகாரி அவருக்கு தற்போதைய பயணம் குறித்து எடுத்துரைத்தார்.

 நமது கடல் பகுதிகளை காப்பதிலும், இந்தியரஷ்ய உறவுகளை வலுப்படுத்துவதிலும் இந்திய கடற்படை ஆற்றி வரும் பங்கை தூதர் பாராட்டினார்.

ரஷ்ய கடற்படையின் பால்டிக் பிரிவின் துணை தளபதி, துணை அட்மிரல் செர்ஜெய் யெலிசெயேவ் 2021 ஜூலை 23 அன்று தபாரை பார்வையிட்டார். அணிவகுப்பு மரியாதையுடன் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு நாட்டு கடற்படைகளுக்கிடையேயான வலுவான நட்பு குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் உள்ள வரலாறு சிறப்புமிக்க நினைவுக் கல்லறையில் கப்பலின் தலைமை அதிகாரி கேப்டன் மகேஷ் மங்கிபுடி அஞ்சலி செலுத்தினார்.

ஜூலை 25 அன்று, ரஷ்ய அதிபர் திரு விளாடிமிர் புதின் ஆய்வு செய்த ரஷ்ய கடற்படையின் 325-வது ஆண்டு விழாவில் தபார் பங்கேற்றது. 2021 ஜூலை 28 மற்றும் 29 அன்று கூட்டுப் பயிற்சியில் கப்பல் பங்கேற்கும்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here