நாமக்கல்:

நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தகவல் தொழில் நுட்ப அணி அறிமுகக் கூட்டம் சேந்தமங்கலத்தில் மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான காந்திசெல்வன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாத் வரவேற்புரை ஆற்றினார். சேந்தமங்கலம் ஒன்றிய செயலாளர் அசோக்குமார், காளப்பநாயக்கன்பட்டி பேரூர் செயலாளர் நடேசன் மற்றும் சேந்தமங்கலம் பேரூர் செயலாளர் தனபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணைச்செயலாளரும், மத்திய மண்டல ஒருங்கிணைப்பாளருமான இலக்குவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கூட்டபொருள் பற்றி விளக்கமாக பேசினார்.

இக்கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி, ராமசாமி, மாநில நிர்வாகி நக்கீரன், மாவட்ட துணைச்செயலாளர் விமலாசிவக்குமார், பொருளாளர் செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர் பவித்திரம் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் டாக்டர் மாயவன், அழகரசு, சுப்ரமணியம், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராஜேஷ்குமார், நகர கழக பொறுப்பாளர் ராணா ஆர்.ஆனந்த், ஒன்றிய செயலாளர்கள் ஜெகநாதன், எம்.பி.கவுதம், பழனிவேல், துரை (எ) ராமசாமி, பாலு (எ)பாலசுப்ரமணியம், செந்தில் முருகன், பேரூர் கழக செயலாளர்கள் முருகவேல், கண்ணன், அன்பழகன், செல்வராசு, சுந்தர்ராஜன், சார்பு அணி நிர்வாகிகள் சாம்சம்பத், பெரியசாமி, ராணி பெரியண்ணன், வளையப்பட்டி சுப்ரமணியம், மதிவேந்தன், பாபு, தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர்கள் நாகேந்திரன், மணிவாசகம், தொகுதி ஒருங் கிணைப்பாளர்கள் குணாளன், அசோக், நகர, ஒன்றிய, பேரூர், ஊராட்சி மற்றும் வார்டு தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்கள், கட்சி தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பார்த்திபன் நன்றி கூறினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here