நன்னிலம், பிப். 10 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், ‘நன்னிலம் அருகே..குடிப்பதற்கு பணம் கேட்டு தராத தந்தை உடல் மீது மண்ணெண்ணை ஊற்றி கொளுத்திய மகனை நன்னிலம் காவல்நிலைய காவலர்கள் கைது செய்தனர். அந்நிகழ்வால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
‘திருவாரூர் மாவட்டம், நன்னிலம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட ‘மணவாளம்பேட்டை’ ஊரைச் சேர்ந்தவர் நாராயணன், அவருக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு நாராயணனிடம் மகன் மணிகண்டன் மதுக் குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். அப்போது பணம் தர நாராயணன் மறுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து தந்தை மகன் இருவருக்கிடையே, கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டுள்ளார்கள்.
இந்த நிலையில் மணிகண்டன் வீட்டில் உள்ள மண்ணெண்ணையை தனது தந்தை நாராயணன் மீது ஊற்றி கொளுத்தி விட்டார் என்று கூறப்படுகிறது..
அதில் நாராயணன் உடல் 40 சதவீதத்திற்கு மேலாக எரிந்த நிலையில் அவரை தீககாயங்களுடன் நன்னிலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று.. திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தந்தையை மண்ணெண்ணை ஊற்றி கொளுத்திய மகன் மணிகண்டன் நேற்று இரவே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து நன்னிலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்..



















