புதுதில்லி, ஜன. 23 –

உலகில் கெர்கின்ஸ் ஏற்றுமதியில் இந்தியா முதல் நாடாக உருவெடுத்துள்ளது. இந்தியா, 1,23, 846 மெட்ரிக் டன் அளவுக்கு  வெள்ளரி மற்றும் கெர்கின்ஸ் ஏற்றுமதி செய்துள்ளது. ஏப்ரல் முதல் அக்டோபர் (2020-21) வரை 114 மில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதியாகியுள்ளது.

பதப்படுத்தப்பட்ட வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் 200 மில்லியன் டாலர் என்ற அளவை இந்தியா தாண்டியுள்ளது. உலகம் முழுவதும் கெர்கின்ஸ் என்றழைக்கப்படும் வெள்ளரி ஊறுகாய் ஏற்றுமதியிலும் இந்தியா சாதனை படைத்துள்ளது.

2020-21-ல் இந்தியா 223 மில்லியன் டாலர் மதிப்பிலான 2,23,515 மெட்ரிக் டன் வெள்ளரி மற்றும் கெர்கின்ஸ் ஏற்றுமதி செய்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here