ராமநாதபுரம், ஆக.15-

செய்தி சேகரிப்பு இசக்கி சிவசங்கரன்

இந்திய தேசத்தின் 75 வது சுதந்திர தின வைர விழாவை முன்னிட்டு தேசிய கொடியை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சி தொண்டி பேரூர் கிளை சார்பில் ஏற்றப்பட்டது.

 

75வது சுதந்திர தின தேசிய கொடியேற்று நிகழ்ச்சிக்கு தமுமுக மமக இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜிப்ரி தலைமை ஏற்றார். மாவட்ட துணை செயலாளர் முஹம்மது அலி விழாவில் பங்கேற்க வந்திருந்த அனைவரையும் வரவேற்றார்.

மாவட்ட ஊடக அணி செயலாளர் முஹம்மது பஹ்ருல்லா ஷா, மாவட்ட IPP செயலாளர் முஹம்மது அன்சாரி ஆலிம், மாவட்ட மனித உரிமை பாதுகாப்பு அணி செயலாளர் நாகூர் கனி, ஒன்றிய தலைவர் பீர் முஹம்மது, மமக ஒன்றிய செயலாளர் தொண்டி ராஜ், தொண்டி பேரூர் செயலாளர் சம்சுதீன் முனவ்பர், மமக தொண்டி பேரூர் செயலாளர் பரக்கத் அலி, நகர பொருளாளர் மைதீன்பிச்சை, பேரூர் துணை தலைவர் ஹம்மாது, தொண்டி காவல் சார்பு ஆய்வாளர் பூமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொண்டி ஐக்கிய முஸ்லிம் ஜமாத் தலைவர் ஹிப்பத்துல்லா, வடக்கு தெரு முஸ்லிம் ஜமாத் தலைவர் E. M.S.சாகுல் ஹமீது, பெரிய பள்ளிவாசல் ஜமாத் தலைவர் அஷ்கர், தொழிலதிபர் SMB சுலைமான், இந்து தர்ம பரிபாலன சபை துணை தலைவர் ராஜா, திமுக பேரூர் பொறுப்பாளர் இஸ்மத் நானா, காங்கிரஸ் கட்சி மாவட்ட செயலாளர் பாலசுப்ரமணியன், நகர தலைவர் காத்தார் ராஜா, வன்னியர் சங்க மாநில துணை தலைவர் ஜிம் ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்’

தமுமுக மாநில செயலாளர் M.சாதிக் பாட்சா தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.

 மில்கான், பஹத், ஜாபர், ஜலால், அப்துல்லா, அப்துல் ரசாக், பெரியசாமி, நிஷார், அப்துர் ரஹீம்,உட்பட பேரூர் தமுமுக மமக நிர்வாகிகள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தனர். தொண்டி பேரூர் தலைவர் காதர் நன்றி கூறினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here