கும்பகோணம், ஜூலை. 10 –

கும்பகோணம் தொகுதிக்குட்பட்ட திப்பிராஜபுரம் கிராமத்தில் உள்ள, அரசு உயர்நிலைபள்ளியில்  கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு விழா, ராஜ்யசபா உறுப்பினர் எஸ் கல்யாணசுந்தரம் தலைமையிலும், அரசு கொறடா கோவிசெழியன் முன்னிலையிலும் நடைப்பெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடங்களையும், அறிவியல், கணிணி ஆய்வு கூடங்களையும் ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கேற்றி வைத்தும், கல்வெட்டினை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில், சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்கள் காயத்ரி அசோக்குமார், திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியம் பெருந்தலைவர் சுபா திருநாவுக்கரசு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் உட்பட ஏராளமான பள்ளி மாணவ மாணவியர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் கிராமமக்கள் என பலதரப்பட்டவர்கள் பெரும் திரளாக பங்கேற்று விழாவினை சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியின் நிறைவில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சீரிய நடவடிக்கையால் அவர் மீது நம்பிக்கை கொண்டு, கடந்த ஆண்டைப் போலவே இவ்வாண்டும், அரசு பள்ளிகளில் சேரும் மாணவ மாணவியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும், உயரும் எண்ணிக்கைக்கு ஏற்பவும், வருங்கால உயர்வை கணித்தும், அதற்கு ஏற்ப புதிதாக கூடுதல் ஆசிரியர் நியமனமும், கூடுதல் வகுப்பறை கட்டிடங்களும் அடுத்தடுத்து திறக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here