சென்னை, ஜன. 28 –

தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இந்தியாவில் இதுவரை 164.44 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 21,05,611 ஆகும். விகிதத்தில் 5.18% ஆக உள்ளனர். குணமடைந்தோர் விகிதம் தற்போது 93.60% சதவீதமாகவும், கடந்த 24 மணி நேரத்தில் 3,47,443 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,80,24,771 என அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,51,209 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 15.88சதவீதம் ஆகும். வாராந்திர பாதிப்பு விகிதம் 17.47 சதவீதம் ஆகும். இதுவரை மொத்தம் 72.37 கோடி கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அதில் கடந்த 24 மணி நேரத்தில் 15,82,307 கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டள்ளது .

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here