சென்னை, நவ. 20 –
இயக்குனர் சதீஷ் ராமகிருஷ்ணனின் 2 வது படைப்பு 2323 தி பிகினிங். இத் திரைப் படத்தை மகேந்திர மசனையன் தயாரித்துள்ளார். இத்திரைப்படம் செயற்கையாக உருவாக்கப்பட்ட புயலை கதைக்கருவாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள திரைப்படமாகும்.
இதில் மக்களின் நீர் தேவையை தீர்த்து வைக்க நினைக்கும் நாயகன் மாயோன் அவனிடம் உள்ள திறனை பயன்படுத்தி மின்சாரத்தை உருவாக்குகிறார். மேலும் உலகத்தையே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர திட்டம் தீட்டும் வாயு ஒரு பக்கம் என இவர்கள் இருவருக்கிடையே நடக்கும் போராட்டத்தை கதைக்களமாக அமைத்து, அருமையாக கையாண்டுள்ளார் இயக்குனர் சதீஷ் ராமகிருஷ்ணன் மேலும் இத்திரைப்படத்தின் நாயகனாகவும் நடித்துள்ளார் இயக்குனர் சதீஷ் ராமகிருஷ்ணன்
இந்த திரைப்படத்தில் அருள் டி ஷங்கர், மகேந்திர மசனையன், சாத்விகா, கிரிஸ்டல், அபர்ணா ராதாகிருஷ்ணன், சரவணன் ராதாகிருஷ்ணன் மற்றும் ஆனந்த் லிங்கா ஆகியோர் நடித்துள்ளனர். இத் திரைப்படம் கடந்த நவம்பர் 18 ஆம் தேதி தமிழக திரையரங்குகளில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என அப்படத்தின் பட வினியோகஸ்தர் தெரிவிக்கிறார்.























