சென்னை, டிச. 22 –

ஐஐடி கான்பூர் பட்டமளிப்பு விழா எதிர்வரும் டிசம்பர் 28 அன்று நடைப்பெற உள்ளது. அவ்விழாவில் பிரதமர் மோடி உரை நிகழ்த்த உள்ளார். பிரதமரின் உரையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு ஐஐடி கான்பூர், பிற ஐஐடி-க்களின் மாணவர்கள், முன்னாள் மாணவர்களுக்கு வேண்டுகோளை பிரதமர் தமது டிவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.

 ஐஐடி கான்பூர் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை 28 டிசம்பர் 2021 அன்று உரையாற்றுகிறார். தமது உரையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு ஐஐடி கான்பூர், பிற ஐஐடி-க்களின் மாணவர்கள் மற்றும் உலகெங்கும் பரவியுள்ள ஐஐடி-யின் முன்னாள் மாணவர்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

“பட்டமளிப்பு விழாவில் உரையாற்றுவதற்காக இம்மாதம் 28-ந் தேதி @IITKanpur வருவதை நான் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன். இதுவொரு வலிமையான நிறுவனம், அறிவியல் மற்றும் கண்டுபிடிப்புகளில் பங்களிப்பு வழங்குவதில் முன்னோடியாக உள்ள நிறுவனம். கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு அனைவருக்கும் நான் அழைப்பு விடுகிறேன்.” என்று அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here