தஞ்சாவூர், மே. 07 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…

தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நுரையீரல் மருத்துவத்துறை சார்பில் இன்று “உலக ஆஸ்துமா தின” விழாவை முன்னிட்டு ஆஸ்துமா நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கான விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. மேலும் அம் முகாமில் ஏராளமானவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜிநாதன் தலைமையில் நுரையீரல் மருத்துவத்துறை, பொது மருத்துவ துறையின் மாணவ-மாணவிகள் மற்றும் டாக்டர்கள் மனித சங்கிலியாக நின்று ஆஸ்துமா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.‌

அப்போது ஆஸ்துமா வராமல் தடுப்பது எப்படி என்பது குறித்து ஒலிபெருக்கியில் வாசிக்க அதை அனைவரும் திரும்ப வாசித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பின்னர் மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜிநாதன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்…

இன்று உலக ஆஸ்துமா தின விழாவை முன்னிட்டு பரிசோதனை முகாம், மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றதெனவும், மேலும் தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு மாதத்திற்கு சுமார் 1500 வெளி நோயாளிகளுக்கு ஆஸ்துமா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என அப்போது அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் தெரிவிக்கையில் ஆஸ்துமா நோயை ஆரம்ப கட்ட நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை அளித்தால், அந் நோயினை முற்றிலும் குணப்படுத்தலாம் என தெரிவித்த அவர்  ஆஸ்துமா என்பது குணப்படுத்தக்கூடிய நோய்தான். ஆனால் சிலரிடம் ஆஸ்துமா பற்றி தவறான புரிதல் உள்ளது என்றார்.

மேலும் அவர்களுக்கு ஆஸ்துமா குறித்து போதிய விழிப்புணர்வு தேவை. தூசு, புகைப்பிடித்தல், கெமிக்கல் போன்றவற்றில் ஒவ்வாமை ஏற்படுபவர்களுக்கு ஆஸ்துமா ஏற்படும். மூச்சு விடுவதில் அடிக்கடி சிரமம் ஏற்பட்டால் அவர் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர் என்பதை எளிதாக கண்டுபிடித்து விடலாம்.

பனிக்காலம் மட்டுமின்றி கோடை காலத்திலும் ஆஸ்துமா தாக்கும். நாம்தான் கவனமாகவும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும். எனவும் ஆஸ்துமாவுக்கு தற்போது பல நவீன சிகிச்சை முறைகள் வந்துவிட்டன. எனவும் அதனால் யாரும் அந் நோய் பற்றிக் கவலைப்பட வேண்டாம். குறிப்பாக புகை பிடித்தல் பழக்கம் உள்ளவர்கள் அதனை உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சிகளில் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ராமசாமி, நிலைய மருத்துவர் செல்வம், நுரையீரல் மருத்துவப் பிரிவு துறை தலைவர் அன்பானந்தன், பொது மருத்துவப் பிரிவு துறை தலைவர் கண்ணன், பதிவாளர் மணிமாறன், நுரையீரல் மருத்துவப் பிரிவு உதவி பேராசிரியர்கள் ராமசாமி ,நடேஷ், கிருபானந்தம் மற்றும் துறை பேராசிரியர்கள் ,உதவி பேராசிரியர்கள், செவிலியர்கள் , மாணவ -மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். .

 

பேட்டி.. பாலாஜி நாதன்

தஞ்சை மருத்துவ கல்லூரி முதல்வர்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here