உத்திரமேரூர், செப் . 14 –
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் வட்டம் சாலவாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, சங்கராபுரம் பகுதியில் வசித்து வருபவர் மோகன் பொன்னி தம்பதியினர்.
திருக்கழுக்குன்றம் தாலுகாவைச் சேர்ந்த, 16 வயது சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் இருவரும் “போக்சோவில்” கைது நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பெற்றோர்கள் புகார் மனுவில் கூறியிருப்பதாவது;
தனது மகளை வாலாஜாபாத்தில் உள்ள டைலரிங் பள்ளியில் பயிற்சி பெறுவதற்காக, பிப்ரவரி மாதம் சங்கராபுரத்தில் உள்ள தனது அக்காள் பொன்னி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அவர் அவர்கள் வீட்டில் தங்கி தையல் பயிற்சி வகுப்பிற்கு சென்று வந்த தாகவும் அதில் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது அக்காவிற்கு, அதாவது பொன்னிக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் மோகன் என்பவருடன் திருமணமாகி, குழந்தைகள் ஏதும் இல்லாத நிலையில் இருவரும் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் மோகன் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இச் சம்பவம் குறித்து சிறுமியின் தாய், உத்தரமேரூர் தாலுகா, சாலவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்ததில் சிறுமி பாலியல் பலாத்காரத்தால் பதிக்கப்பட்டது உறுதியானது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சங்கராபுரம் மோகன் மீதும் பாலியல் பலாத்காரத்திற்கு உடந்தையாக இருந்த, அவரது மனைவி பொன்னி ஆகிய இருவர் மீதும் “போக்சோ” சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.