பாபநாசம், ஏப். 23 –

பாபநாசத்தில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மற்றும் பயிற்சி பாசறை  சார்பில் மாபெரும் புத்தகம் மற்றும் சணல் பொருட்கள் கண்காட்சி நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ச.மயில் நூறாண்டுக்கு முன்பு தொழிலாளர்கள் போராடிப்பெற்ற உரிமையை தற்போது திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு அதனை நீர்த்துப் போகச் செய்தது கண்டனத்துக்குரியதென அப்போது கண்டனத்தை தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே தனியார் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மற்றும் பயிற்சி பாசறை சார்பில் புத்தகம் மற்றும் சணல் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்ச்சி  நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு ஆரம்ப பள்ளி கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ச.மயில் பங்கேற்றார்.

மேலும் இந்நிகழ்ச்சியின் இறுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் தொழிற்சாலை சட்டத் திருத்த விதி 65 A வின் கீழ்  நிறைவேற்றி உள்ள சட்ட திருத்தமானது தொழிலாளர்களுக்கு விரோதமான சட்டமாக இருக்கிறது எனவும்,

மேலும், தொழிலாளர்கள் 100 ஆண்டுகளுக்கு முன்பு 8 மணி நேர வேலை என்கிற  உரிமையை  போராடிப்பெற்ற அவர்களின் உரிமை என்பது இன்றைக்கு குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது எனவும், மேலும் தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் கொண்டு வந்த சட்ட திருத்த மசோதாவை உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும் அப்போது தமிழ்நாடு அரசு ஆரம்பப்பள்ளி கூட்டமைப்பு சார்பாக கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார்.

மேலும் தமிழ்நாடு அரசு கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு அறிவித்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்ற வில்லை எனவும் அப்போது அவர் குறிப்பிட்டார்.

பேட்டி :ச.மயில் –

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here