தஞ்சாவூர், ஏப். 27 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…

தஞ்சை  மாவட்டம் பூதலூர் திருக்காட்டுப்பள்ளி சாலையில்  குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து வெயில் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தஞ்சாவூர்  மாவட்டம்  பூதலூர்  தாலுகாவிற்கு உட்பட்ட  நடுத்தெரு, சந்து ,தெரு அக்ரஹாரம் உள்ளிட்ட  பகுதியில்  உள்ளது. தேவையான குடிநீர் காவிரி  ஆற்றில் இருந்து குழாய்கள் மூலம் கொண்டு வரப்பட்டு அப்பகுதி பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது.

மேலும் அப்பகுதியில் 800- க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த சில நாட்களாக குடிநீர் முறையாக வழங்கப் படவில்லை எனவும் அது குடிப்பதற்கான தகுதியில்லாமல் உப்பு நீராக வருவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் நல்ல தண்ணீர் எடுப்பதற்கு கிட்டத்தட்ட ஐந்து கிலோ மீட்டர் சென்று எடுத்து வர வேண்டிய அவல நிலையும் ஏற்பட்டுள்ளதாகவும்,  .அதனால் முதியவர்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகிவுள்ளனர். என தெரிவிக்கின்றனர்.

அப் பிரச்சினைக் குறித்து பலமுறை  நிர்வாகத்திடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பூதலூர் திருக்காட்டுப்பள்ளி சாலையில் காலிக் குடங்களுடன் சாலையில் அமர்ந்து  மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல் கைவிட்டு கலைந்து செல்லாவிட்டால்  பொதுமக்களை அனைவரையும்  கைது செய்து விடுவதாக  போலிசார்  மிரட்டும் தோனியில் பேசியதால் பொதுமக்களுக்கும் அதிகாரி இருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது .இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சாலை மறியலால் 2 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here