திருவாரூர், ஏப். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் …
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே கொரடாச்சேரி ஒன்றிய பகுதியான நாகக்குடி ஊராட்சியில் கடந்த 2020 – 21 ஆண்டில் சுமார் 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
இந்த நீர்த்தேக்க தொட்டியில் இருந்து அருகே உள்ள சக்கரமங்கலம், பண்ணைவிளாகம் பகுதியில் சுமார் 150 குடும்பங்களுக்கு மேல் மக்கள் தண்ணீரை பயன்படுத்தி வந்தனர் உள்ளது..
மேலும், கடந்த அதிமுக ஆட்சியில் இந்த நீர் தேக்க தொட்டியில் இருந்து மோட்டார் மூலம் 25 குடும்பங்களுக்கு மேல் வசிக்கக்கூடிய பண்ணைவிளாகம் பகுதியில் (மினி டேங்க்) சிறிய நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில்.. கடந்த ஒரு வருட காலமாக மின் மோட்டார் பழுதடைந்து.. குடிப்பதற்கும்.. அத்தியாவசிய தேவைகளுக்கும் தண்ணீர் இல்லாமல் அப்பகுதி மக்கள் அல்லாடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது..
தொடர்ந்து..ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும்.. இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.. எனவும், பழுது நீக்க எடுத்துச் சென்ற மின் மோட்டார் குறித்து ஊராட்சி அலுவலகத்தில் கேட்டால், பத்தாயிரம் ரூபாய் கேட்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்…
மேலும், அப்பகுதியில் ஆறு, குளங்கள் திமுக ஆட்சியில் தூர்வார படாததால் ஆழ் குழாய் தெரு பைப்புகளும் பழுதடைந்து காணப்படுகிறது.
இதுகுறித்து அப்பகுதி பெண்கள் சொல்லும்போது… குடிப்பதற்கும்.. சமையல் செய்வதற்கும்.. அத்தியாவசிய தேவைக்கும் கூட தண்ணீர் இல்லாமல்.. அரை கிலோ மீட்டர் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலை உள்ளது.. எனவும், அருகே உள்ள வெட்டாறில் மத்திய பல்கலைக்கழகத்தின் கழிவுநீர் கலப்பதால்.. ஆற்று நீரையும் பயன்படுத்த முடிவதில்லை என்றும்.. மின் மோட்டாரை சரி செய்து தண்ணீர் கிடைக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்… மேலும் தெரு பைப்புகளைம் களையும் சரி செய்து தர வேண்டும்..எனவும் கோரிக்கை வைத்தனர்..
பேட்டிகள்:
1.பரமேஸ்வரி,
2.மீனாட்சி,
பண்ணை விளாகம்,




















