திருவள்ளூர், ஜூலை. 29 –
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பு, மின்சாரதுறை அமைச்சர் உத்திரவின் படி, மின் பாதைகள் பராமரிப்பு, சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றுதல், மற்றும் மின் பாதையில் உரசும் மரக்கிளைகள் அகற்றல் போன்ற பணிகள் மேற்கொள்ளப் படவுள்ளதால் திருவள்ளூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக சில பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதன்படி ஜூலை 31 ஆம் தேதியன்று திருநின்றவூர் பகுதியிலுள்ள திருவேங்கட நகர், முத்தமிழ்நகர், பெரியார்நகர், திருநின்றவூர் கிராமிய பிரிவுக்குட்ப்ட்ட வேப்பம் பட்டு பகுதிகளிலும்,
மேலும் ஆகஸ்ட் 1 ஆம் தேதியன்று வெள்ளியூர், விளாபாகம், செம்பேடு, திருகணம்செரி ஆகிய பகுதிகளிலும்,
அதுப்போன்று ஆகஸ்ட் 2 ஆம் தேதியன்று நேமம், குத்தம்பாக்கம், கன்னடபாளையம், மடவிளாகம், பிரயம்பத்து, பேரதூர், மேலகொண்டையர், புலியூர்கண்டிகை, பானம்பாக்கம், செஞ்சி, மதுராகண்டிகை, ராமன்கோயில், மடத்துக்குப்பம், விநாயகபுரம், மணவூர், சென்னாவரம், அண்ணாநகர், சின்னக்களக்காட்டூர், பேரம்பாக்கம், கொண்டான்செரி, காரனை, கொட்டையூர், செய்யம்பாக்கம் ஆகிய பகுதிகளிலும்,
மேலும், ஆகஸ்ட் 3 ஆம் தேதி திருநின்றவூர் கிராமம் கொசவன்பளையம், ராஜன்குப்பம் பகுதியிலும்,
ஆகஸ்ட் 5 ஆம் தேதியன்று செம்பரம்பாக்கம் கோத்தேஜ் அடுக்குமாடி குடியிருப்பு, கோவிலாம்பண்டி, ஜாபர்நகர், காரனை, விடையூர், ஆட்டுபாக்கம், நெமிலி அகரம், கலியனூர், பழையனூர், வேணுகோபாலபுரம், கூடல்வாடி, பேரம்பாக்கம், கொண்டன்செரி, மப்பேடு, கீழச்செரி, காசா கிராண்ட், செவ்வாய்பேட்டை, கந்தன்கொல்லை, தொழுவூர், தண்ணீர்குளம், ராமாபுரம், வெள்ளகுளம், எஃ.சி.ஐ. காலனி, சிட்கோ தொழிற்பேட்டை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் மேற் கொள்ள உள்ளதாக மாவட்ட நிர்வாகம் செய்தி வெளியீட்டு உள்ளது.