மீஞ்சூர், மே. 23 –
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்கட்பட்ட ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளிகளுக்கு சமூக வளர்ச்சி நிதி மற்றும் சட்டமன்ற உறுப்பினரின் நிதியின் கீழ் புதிய கட்டிடம் கட்டப்படுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நாலூர் ஊராட்சிக்குட்பட்ட ராஜபாளையம் கிராமத்தில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி .ரவி .தலைமை வகித்தார். மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமகிருஷ்ணன் கிராம ஊராட்சி ரவி உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டிஜே கோவிந்தராஜன் .அதானி துறைமுகத்தின் செயலாளர் ராதாகிருஷ்ணன். உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.
மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட 1 முதல் 5 வரை உள்ள ஆரம்ப பள்ளிக்கூடங்களுக்கு கட்டிடங்கள் சரியில்லாமல் இருந்த நிலையில் அவற்றை இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் அமைப்பதற்கு உண்டான முயற்சியில் மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முயற்சி செய்ததன் பேரில் முதல் கட்டமாக ஒன்றியத்தில் அடங்கிய நாலூர். மேலூர் . சிருளப்பாக்கம். தேவதானம். வன்னிபாக்கம். உள்ளிட்ட 23 கிராமங்களில் அதானி துறைமுகத்தின் கிராம வளர்ச்சி நிதி மற்றும் சட்டமன்ற உறுப்பினரின் நிதியின் கீழ் ஒவ்வொரு கிராமத்திற்கும் 18. 90 லட்சம் மதிப்பீடு செய்து 23 புதிய பள்ளிக்கூடங்கள் கட்டுவதற்கு சுமார் 4 கோடியே 34 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகள் துவங்குவதற்காக இன்று பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தலைவர்களின் சங்கத்தலைவர் வாசுகி நிலவழகன். நாலூர் ஊராட்சி மன்ற தலைவர் சுஜாதா ரகு. ஒன்றிய கவுன்சிலர்கள் சகாதேவன். கதிரவன். துணைத்தலைவர் சுரேஷ்பாபு. மெரட்டூர்ஜானகிராமன். வார்டு உறுப்பினர்கள் சுபத்ரா திருநாவுக்கரசு .உஷா சுரேஷ் கேடிஆர் .காணியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீசன் .வாயலூர் ஊராட்சி மன்ற தலைவர் பாபு. உள்ளிட்டோரும் ஒப்பந்ததாரர் பாபு. நாலூர் சூர்யா. முன்னாள் தலைவர் பாளையம். ஊராட்சி செயலர் பாபு .உள்ளிட்ட முக்கிய பொறுப்பாளர்களும் மற்றும் தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.






















