வடமதுரை, மார்ச். 22 – செய்தி சீனிவாசன்

வடமதுரை ஊராட்சி ஸ்ரீராமாபுரம் கண்டிகை கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் சுற்றுச்சுவர் மற்றும் எரி மேடை கட்டும் பணிக்கான பூமி பூஜையை ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி கோதண்டன்  தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வடமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீ ராமாபுரம் கண்டிகை கிராமத்தில் உள்ள சுடுகாட்டிற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக  வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூபாய்.19.43 லட்சம் மதிப்பீட்டில் சுடுகாட்டிற்கு சுற்றுச்சுவர் மற்றும் எரிமேடை காத்திருப்பு மேடை உள்ளிட்டவை பணிகளுக்கான பூமி பூஜை செய்து அடிக்கல் நடும் விழா ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி கோதண்டன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற துணை தலைவர் பாக்கியலட்சுமி ரமேஷ், 2.வது வார்டு உறுப்பினர் வைஷாலி பாலாஜி மற்றும் ஸ்ரீ ராமாபுரம் கண்டிகை கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here