காஞ்சிபுரம், மார்ச். 21-

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஐக்கிய விவசாயிகள் முன்னணி சங்கத்தினர் ஒன்றிய அரசின் செயலைக் கண்டித்து  குரல் முழக்கம் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், தலைநகர் டெல்லியில் போராடிய விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிட கோரியும், போராட்டத்தில் உயிர் நீத்த விவசாயிகள் குடும்பத்திற்க்கு நிவாரணம் வழங்க கோரியும், விவசாய விலை பொருட்களுக்கு ஆதார விலையை சட்டமாக்க கோரியும், 2020 மின்சார மசோதாவை திரும்ப பெற கோரியும், போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற கோரியும், போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்திட சிங்கு பார்டில் இடம் ஒதுக்கீடு செய்ய கோரியும் அவர்கள் குரல் முழக்கம் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here