பொன்னேரி, ஜூலை. 15 –

பொன்னேரியில் இன்று நடைப்பெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்திற்கு அரசு அலுவலர்கள் காலதாமதமாக வருகை தந்த தால் .விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் நலன் காக்கும் மாதாந்திர  கூட்டம் காலை 10 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முன்கூட்டியே விவசாயிகள் அங்கு கூடினார்கள்.

இந்நிலையில் மதியம் 12 மணிவரை அரசு அலுவலர்கள் ஒருவர் கூட கூட்டத்திற்கு வராததால் விரத்தி அடைந்த விவசாயிகள் கூட்ட அரங்கை விட்டு ஆத்திரத்துடன் வெளியேறி அலுவலக நுழைவு வாயில் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அங்கு வந்த பொறுப்பு கோட்டாட்சியர் ஜோதி, விவசாயிகளை சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார் அவரை முற்றுகையிட்ட விவசாயிகள் தங்களுக்கு பல்வேறு பணிகள் இருப்பதாகவும் ஆனால் அரசு அலுவலர்களான நீங்கள் வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும் சம்பளம் வந்துவிடும் என்று இதனால் எங்களைப் பற்றி ஏன் கவலைப்பட போகிறீர்கள் என காட்டமாக கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் கூற முடியாமல் திணறினார். பின்னர் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் ஒருவர் கூட கலந்து கொள்ளாத நிலையில் வேளாண், பொதுப்பணி, மின்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைச்சார்ந்த அரசு அலுவலர்கள் மட்டும் பங்கேற்று ஒப்புக்காக கூட்டத்தை நடத்தினார்கள் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here