மீஞ்சூர், ஏப். 02 –
மீஞ்சூரில் காயிதே மில்லத் சமூக நல அறக்கட்டளையின் மூன்றாம் ஆண்டு துவக்கம் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஆரியன்வாயில் பகுதியில் இயங்கி வரும் காயிதே மில்லத் சமூக நல அறக்கட்டளையின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா நேற்று அப்பகுதி தனியார் பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது
விழாவிற்கு அறக்கட்டளையின் பொறுப்பாளரும் மற்றும் வார்டு கவுன்சிலருமான அபுபக்கர் சித்திக் தலைமை வகித்தார். மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணிக்கு மோகன்ராஜ். துணைத்தலைவர் அலெக்ஸாண்டர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் துரைசந்திரசேகர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மேலும் கொரோனா நேரத்தில் அப்பகுதிகளில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள். அஞ்சல் துறை அதிகாரிகள். மருத்துவ ஊழியர்கள் உள்ளிட்டவர்களை கௌரவித்து கேடயங்களை வழங்கினார். மேலும் மீலாதுநபி திருநாளை முன்னிட்டு குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திரளான பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர்.




















