திருவள்ளூர், டிச. 01 –
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு கூனங்குப்பம், ஆண்டிகுப்பம், கோட்டை குப்பம், நடுவூர்மாதா குப்பம் ,உள்ளிட்ட மீனவ கிராம மக்கள் பழவேற்காடு ஏரியில் மீன் பிடித்து வந்த நிலையில், கூணங்குப்பத்தை சார்ந்த மீனவர்கள் கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக தங்களை ஏரியில் மீன் பிடிக்க கூடாது என மற்ற மீனவ கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், இதனால் ஏற்பட்ட பிரச்சனையில் வருவாய் துறையினர் மீன்வளத்துறை அதிகாரிகள் பலகட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியும் பிரச்சனைக்கு தீர்வு காணப்படவில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால், தங்களின் மீன்பிடி வாழ்வாதாரம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் தங்களுக்கு வேறு வழியில்லாததால், தங்கள் பகுதியில் இருந்து வெளியேறி குடும்பத்துடன் நடை பயணமாக ஆதார் ,வாக்காளர் அட்டை, உள்ளிட்டவற்றை ஒப்படைக்க நடைபயணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி நடந்துசென்றனர்.
அப்போது அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியும் அதனை மறுத்து தொடர்ந்து சென்ற நிலையில் அவர்களை மீண்டும் வஞ்சிவாக்கம் கூட்டு சாலை அருகே சார் ஆட்சியர் ஐஸ்வர்யா இராமநாதன் ,மற்றும் காவல் துறையினர் தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தங்கள் பிரச்சனைக்கு தீர்வு காணும் வரையில் போராட்டத்தை கை விட மாட்டோம் என கூறி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்கு குவிக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தையில் சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் மற்றும் வருவாய் துறையினர் அவர்களிடம் கோரிக்கையை கேட்டறிந்தனர்.
தங்களை மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டுமெனவும் .தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரையில் போராட்டம் தொடரும் என மீனவர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கும் அனுப்பமாட்டோம் என அப்போது அவர்கள் தெரிவித்தனர்.
பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருதரப்பை அழைத்து பேசி இப்பிரச்சினைக்குறித்து விசாரணை மேற்கொண்ட பின்னர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என சார் ஆட்சியர் தெரிவித்தார்.
அதனை மீனவர்கள் ஏற்காததால் மீண்டும் பயணத்தை தொடர முயன்றனர் அவர்களிடம் இரண்டாவது முறையாக சமரசம் மேற்கொண்டதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.
இருதர்பிடமும் சார் ஆட்சியர் நடத்தும் பேச்சு வார்த்தையில் தீர்வு ஏற்படாவிட்டால், கோட்டையை நோக்கி சென்று போராட்டத்தில் ஈடுபடுவோம் என அப்போது அவர்கள் தெரிவித்துள்ளனர்.





















