கும்பகோணம், ஜூலை. 15 –
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவர் அப்பாதிப்பில் இருந்து பூரண குணமடைந்து விரைவில் மக்கள் பணிகளை தொடர வேண்டும் என கும்பகோணம் மாநகராட்சி திமுக உறுப்பினர்கள் சார்பில் அரசு மருத்துவமனையில் உள்ள 500 க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு பிரட், சத்து பானம் மற்றும் முகக்கவசம் வழங்கினார்கள்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பை குறைக்க தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்து பொது மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவதுடன், கொரோனா தொற்றை தடுத்திட மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தி வந்த நிலையில், கடந்த 12 தேதி தமிழக முதல்வருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானதையடுத்து தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார்.
இதனால் பொதுமக்களின் அடிப்படை வசதிகள், மற்றும் நலத்திட்டங்களை நிறைவேற்றும் வகையில் நாள்தோறும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வரும் முதல்வரின் மக்கள் பணித் தொடர அவர் கொரோனா தொற்றிலிருந்து முதல்வர் பூரண குணமடைந்து மக்கள் பணியை மீண்டும் தொடர்ந்து செயலாற்றிட வர வேண்டும் என்று திமுக மாநகராட்சி சார்பில் துணை மேயர் சு.ப தமிழழகன் தலைமையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள 500க்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு பிரட் சத்துபானம் மற்றும் முகக் கவசம் உள்ளிட்டவைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மண்டல தலைவர் ஆசை, மாநகராட்சி துணை செயலாளர் ரவிச்சந்திரன், மாநகராட்சி பொருளாளர் சோடா கிருஷ்ணமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் கவிதா மோகன்ராஜ், மாமன்ற உறுப்பினர்கள் அந்தராமன், முருகன், மருத்துவ கண்காணிப்பாளர் கமரூல்ஜமான் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.





















