PIC FILE COPY
திருவண்ணாமலை, மார்ச். 20-
வனத்தீயில் சிக்கிக்கொண்டவர்களை மீட்பது எப்படி? என்பது குறித்து திருவண்ணாமலை மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் நேற்று செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதில் 25 பேர் கலந்து கொண்டனர்.
வேலூர் வனச்சரக அலுவலர் சுஜாதா உத்தரவின் பேரில், திருவண்ணாமலை மாவட்ட வனஅலுவலர் அருண்லால் அறிவுரையின் பேரில் திருவண்ணாமலையில் உள்ள மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் நேற்று வனத்தீயில் சிக்கிக்கொண்டவர்களை எப்படி மீட்பது? வனத்தீயை எப்படி அணைப்பது? எப்படி முதலுதவி அளிப்பது? என்பது குறித்து செயல்முறை விளக்க பயிற்சி முகாம் நடைபெற்றது.
திருவண்ணாமலை வனச்சரக அலுவலர் சீனிவாசன் தலைமையில் நடந்த இப்பயிற்சியில் வைகை அணை வனக்கல்லூரியில் பயிற்சி பெற்ற 4 வல்லுனர் குழுவினர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். இப்பயிற்சியில் திருவண்ணாமலை வன பணியாளர்கள் 25 பேர் கலந்து கொண்டனர். சுமார் 2 மணி நேரம் இப்பயிற்சி நடைபெற்றது.