கும்பகோணம், மார்ச். 16 –

கும்பகோணம் பங்கஜவல்லி சமேத ஆதிவராகப் பெருமாள் திருக்கோயில் பங்குனி மாத மக நட்சந்நிரத்தினை முன்னிட்டு இன்றிரவு திருக்கல்யாண உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

கும்பகோணத்தில் மகாமகம் தொடர்புடைய ஐந்து வைணவத் திருத்தலங்களில் ஒன்றான பங்கஜவல்லி சமேத ஆதிவராகப் பெருமாள் திருக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாத மக நட்சத்திர தினத்தன்று திருக்கல்யாண வைபவம் நடைபெறுவது வழக்கம். அது, போல இவ்வாண்டும் இவ்விழா இன்று இரவு மாலை மாற்றும் வைபவம் சீர்வரிசை சமர்ப்பித்தல் ஊஞ்சல் உற்சவம் நலுங்கு வைத்தல் உள்ளிட்ட சடங்குகள் நடைபெற்ற பிறகு, பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நாதஸ்வர மேள தாளம் முழங்க ஹோமம் வளர்த்து பங்கஜவல்லி தாயாருக்கு மாங்கல்யம் பூட்ட திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here