எல்லாபுரம், ஆக. 12 –

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம். பெரியபாளையம் அருகேவுள்ளது கன்னிகைப்பேர் கிராமம். மேலும் இக்கிராமத்தில் சுமார் 5000. க்கு மேற்பட்ட மக்கள்  வசித்து வருகின்றனர்.

இந்தநிலையில், அக்கிராமத்தின் பழைய ஊராட்சி மன்ற கட்டிடத்திற்கு பின்புறம் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் பெரிய குளம் ஒன்று உள்ளது. இக் குளத்தினை குடிநீர் தேவைக்காக கடந்த 50 வருடத்திற்கு முன்பாக அக்கிராம மக்கள் பயன் படுத்தி வந்தனர்.

ஆனால் தற்போது இக்குளத்தின் நிலை கடுமையாக சீரழிந்து உள்ளது. மேலும், இக்குளத்திற்கு வரும் நீர்வரத்து கால்வாய்கள் அனைத்தும் காணாமல் போய்விட்டதோடு, தற்போது அக்குளமும் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி உள்ளது .

மேலும் அக்குளத்தினை சுற்றிவுள்ள குடியிருப்புகளில் இருந்து வரும் கழிவு நீரானது அக்குளத்தில் வடிந்து நுர்நாற்றம் வீசும் நிலையிலும், மேலும் சேரும் சகதியாக காட்சியளிக்கிறது.

மேலும் அக்குளத்தில் அடர்ந்த முள் புதர்களும், ஞானங்களும் வளர்ந்து விஷ பூச்சிகளுக்கு இருப்பிடமாக மாறிவுள்ளது. அங்கு சுற்றித்திரியும் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகளும் குடியிருப்புகளுக்குள் சென்று விடுவதாகவும் அப்பகுதியில் உள்ள இயற்கை பாதுகாப்பு ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், நீர்நிலை பாதுகாப்பு ஆர்வலர்கள் என அனைவரும் தெரிவிக்கின்றனர்.

அது மட்டுமல்லாமல், அப்பகுதியில் உள்ள மீன், இறைச்சி கடைகளில் இருந்து கழிவுகளை கொண்டு வந்து இக்குளத்தில் கொட்டுவதால் துர்நாற்றம் வீசி பல்வேறு தொற்று நோய்களும் ஏற்படும் அபாயமும் நிலவி வருவதாக அவர்கள் மேலும் புகார் தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து இக்குளம் ஆக்கிரமிப்பாளர்களால் மிகவும் குறுகிய அளவை எட்டி வருவதாகவும், அதனைத்தடுத்திடவும் மீண்டும் ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்டிடவும், அக்கிராமத்தில் நடைபெற்று வரும் கிராமசபா கூட்டங்களில் மனு அளித்தும், நடவடிக்கை எடுக்கவும் அக்குளத்தினை பாதுகாக்கவும் வலியுறுத்தியும், எவ்வித நடவடிக்கையையும் அக்கிராம ஊராட்சி எடுக்கப்படவில்லை எனவும், தற்போதாவது இப்பெரிய குளத்தை சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறைச்சார்ந்தவர்கள் நடவடிக்கை எடுக்கும் படியும், மேலும் இந்நீர்நிலைக்கு சொந்தமான இடத்தினை வருவாய்துறையினர் மீண்டும் அளவீடு செய்து எல்லைக்கோடு வகுத்து கல்வூன்றி அடர்ந்து கிடக்கும் அக்குளத்தினை சுத்தம் செய்து பராமரித்து அவ்விடத்தில் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து, தற்போது அக்குளத்தில் தேங்கும் மழைநீரை சுத்திகரிப்பு செய்து அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கிடும் நடவடிக்கையை மேற் கொள்ளவேண்டுமென அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் அக்குளத்தினை சுற்றிவுள்ள கரையினில் நடைப்பயிற்சி நடைப்பாதைகள் மற்றும் மனங்காவரும் வகையில், மண்ணிற்கேற்ற மரம் மற்றும் மலர் செடிகளை நட்டு பூங்கா போன்று அழகுப்படுத்திட வேண்டும் என அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here