சோழிங்கநல்லூர், ஏப். 03 –

சோழிங்கநல்லூர் போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் தலைமைக்காவலரின் துணிகரச் செயலால் காவலதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து குவியும் வாழ்த்துக்கள் .

சென்னை ஓ.எம்.ஆர் சாலை செம்மஞ்சேரி குமரன்நகர் பகுதியில் உள்ள நடைமேம்பாலத்தின் மீது இளைஞர் ஒருவரை இருவர் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சித்த வேளையில்,  அவ்வழியாக வந்த செம்மஞ்சேரி போக்குவரத்து ஆய்வாளர் சுகுமாரன் மற்றும் தலைமைக்காவலர் பிரகாஷ் இருவரும் மேம்பாலம் மீது கூச்சலிட்டுக் கொண்டு ஓடி வந்ததை பார்த்த இருவர் அங்கிருந்து கத்தியுடன் தப்பி சென்றனர்.

இந்நிலையில் தப்பி சென்ற இரு இளைஞர்களையும் செம்மஞ்சேரி போக்குவரத்து தலைமை காவலர் பிரகாஷ் துரத்தி சென்ற சமயத்தில் எதிரே வந்த சட்டம் ஒழுங்கு போலீசார் தப்பிவோடிய இருவரில் ஒருவரை மடக்கிப் பிடித்தார்.

அதனைத் தொடர்ந்து காலில் வெட்டுக்காயத்துடன் நடை மேம்பாலத்தில் மயங்கி கிடந்த செம்மஞ்சேரி பகுதியை சேர்ந்த பாட்சா (25) என்ற இளைஞரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசாரிடம் பிடிப்பட்ட இளைஞரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் செம்மஞ்சேரி பகுதியை சேர்ந்த 20-வயதுடைய அருண்குமார் (எ) அம்மாவாசை என்பது தெரிய வந்தது. இவருடன் சேர்ந்து பாட்சாவை வெட்டியது அதே பகுதியை சேர்ந்த 25-வயது மதிக்கதக்க கோழி கார்த்திக் என்ற நபராவர்.

மேலும் போலீசாரின் விசாரணையில் கடந்த வருடம் பாட்சா,  கோழி கார்த்திக் மற்றும் அருண்குமார் இருவரையும் வெட்டியதாகவும் அதற்கு பழி தீர்க்கவே,  இன்று தனியாக நடந்து சென்ற பாட்சாவை அருண்குமாரும், கார்த்திக்கும் பின் தொடர்ந்து சென்றதாகவும், அப்போது, நடைமேம்பாலத்தின் மீது பேசிக் கொண்டிருந்த பாட்சா இருவரையும் கண்டதும் அங்கிருந்து ஓட முயன்ற போது, பாட்சாவின் காலில் அரிவாளால்அருண்குமாரும், கார்த்திக் ஆகிய இருவரும்  வெட்டியதில் பாட்சா கீழே விழுந்ததுள்ளார், மேலும் கொலை செய்யவும் முயற்சித்துள்ளனர். அச்சமயத்தில் போக்குவரத்து போலீசார் கூச்சலிட்டபடி இருவரையும் நோக்கி ஓடி வந்ததால் இருவரும் தப்பித்து ஓடிய போது அருண்குமார் (எ) அம்மாவாசை மட்டும் போலீசாரிடம் சிக்கிக்கொண்டது அவரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

போக்குவரத்து போலீசாரின் துணிகர நடவடிக்கையால் கொலை சம்பவம் தடுக்கப்பட்டதும்,  இதனால் இளைஞரின் உயிரைக் காப்பாற்றிய சோழிங்கநல்லூர் போக்குவரத்து ஆய்வாளர் சுகுமாரன் மற்றும் தலைமை காவலர் பிரகாஷ் இருவருக்கும் காவலதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here