திருவாரூர், மார்ச். 29 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்

வரும் ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரேக் கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதி முறைகள் தேர்தல் ஆணையத்தால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன் பகுதியாக தேர்தல் பறக்கும் மறையினர் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருவாரூர் அருகே வேப்பத்தாங்குடி கிராமத்தில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் விஸ்வநாதன் மற்றும் சிறப்பு உதவி காவல்ஆய்வாளர் உதயகுமார், தலைமை காவலர் சரவணகுமார் உள்ளிட்டவர்கள் வாகன சோதனையில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரில்  1 லட்சத்து 76 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கபணம் ஆவணமின்றி எடுத்துச் சென்றது அச்சோதனையில் தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து பணத்தை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்து திருவாரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் வசம் ஒப்படைத்தனர். பின்பு வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர்  பத்மா, தேர்தல் விதிமுறைகள் தடுப்பு பொருட்கள் ஒருங்கிணைப்பு அலுவலர்  பாரதி  ரொக்க பணம் சரிபார்க்கப்பட்ட பின்னர் திருவாரூர் மாவட்டஆட்சியர் அலுவலக அருகில் உள்ள சார் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here